"இன்னும் ஏன்டா 'சரி' ஆகலன்னு 'ஜடேஜா' இப்போ நெனச்சிட்டு இருப்பாரு..." சைக்கிள் கேப்பில் வெச்சு செஞ்ச 'சுனில் கவாஸ்கர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும், முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்சர் படேல், 2 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறச் சென்றார். கட்டை விரலில் அவருக்கு ஏற்பட்ட முறிவு இன்னும் சரி ஆகாத நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், அவருக்கு பதிலாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அக்சரின் அபார ஆட்டத்திற்கு பிறகு, ஜடேஜாவின் இடம் டெஸ்ட் போட்டியில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கிண்டலாக பதில் தெரிவித்துள்ளார். 'அக்சரின் ஆட்டத்தை பார்த்து விட்டு இன்னும் ஏன் எனது கட்டை விரல் காயம் சரியாகவில்லை என யோசித்து விட்டு, மருத்துவர்களிடமும் இது பற்றி ஜடேஜா கேட்டிருப்பார். ஜடேஜாவுக்கு ஜனவரி 10 ஆம் தேதி காயம் ஏற்பட்டது. ஆனால், பிப்ரவரி முடிந்தும் இன்னும் குணமாகவில்லை' என நக்கலாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடருக்கு அடுத்தபடியாக நடைபெறவுள்ள டி 20 தொடரிலும், காயம் காரணமாக, ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.