"பையன் செம 'கிளாஸ்'ஸா ஆடுறாப்ல.. சீக்கிரமாவே இந்தியா 'டீம்'ல செலக்ட் ஆயிடுவாரு பாருங்க.." 'இளம்' வீரரை வேற லெவலில் பாராட்டிய 'சுனில் கவாஸ்கர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇதுவரை 13 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி, ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும், அதிக பலத்துடன் களமிறங்கி, எதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்து வாய்ப்புகளை கைவிட்டு வருகிறது.

ஆனால், இத்தனை வருடங்களாக கோப்பையை கைப்பற்றாமல் போனதற்கு, இந்த முறை பெங்களூர் அணி பதில் சொல்லப் போகிறது என்றே தோன்றுகிறது. இதற்கு காரணம், 14 ஆவது ஐபிஎல் சீசனில் இதுவரை 4 போட்டிகள் ஆடியுள்ள பெங்களூர் அணி, நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அது மட்டுமில்லாமல், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சரிசம பலத்துடன் பெங்களூர் அணி திகழ்கிறது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கோலி 72 ரன்களும், மற்றொரு இளம் வீரர் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 101 ரன்களும் எடுத்து அசத்தியருந்தனர்.
கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடிய தேவ்தத் படிக்கல், மிகச் சிறப்பான பங்கை அணிக்காக ஆற்றியிருந்தார். அதே போல, இந்த சீசனின் ஆரம்பத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த தேவ்தத் படிக்கல், தற்போது அதிலிருந்து மீண்டு வந்த சதமடித்துள்ளது, பெங்களூர் ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இளம் புயல் தேவ்தத் படிக்கலுக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள், தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), படிக்கலின் ஆட்டம் பற்றி பேசுகையில், 'தேவ்தத் படிக்கல், இந்திய அணிக்காக எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானாலும், நான் பெரிதாக ஆச்சரியப்படப் போவதில்லை. ஏனென்றால், அவரிடம் அதற்கான கிளாஸ் ஸ்டைல் மற்றும் திறனுள்ளது.
முதல் தர போட்டிகள் மற்றும் ராஞ்சி தொடர்களில் டாப் ஸ்கோரராக தேவ்தத் படிக்கல் இருந்துள்ளார். அதே போல, 50 ஓவர் மற்றும் 20 போட்டிகளிலும், படிக்கல் நிறைய ரன்களை குவித்து அற்புதமாக ஆடியுள்ளார்.
இதனால், எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், அவர் இந்திய அணிக்காக தாமதமில்லாமல் ஆடப் போகிறார் என்பதாக நான் நினைக்கிறேன்' என இளம் வீரர் ஒருவரை பாராட்டி, சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
