'இங்கிலாந்துக்கு' பரவிய '50%' கொரோனா 'தொற்றுக்கு...' 'இந்த நாடு தான் காரணம்...' 'தி மெயில் ஆன் லைன்' செய்தி நிறுவனம் 'குற்றச்சாட்டு...'
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான்தான் என தி டெலிகிராப் என்ற பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது.
இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 4,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகிறது. ஊரடங்கு மூலமாக நோய் பரவலைக் கட்டப்படுத்தினாலும், ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் இந்த நோயில் புதிய உயர்வு காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்த போது, நோய் பரவலுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பிரபல இங்கிலாந்து பத்திரிகையான மெயில் ஆன் லைன் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வந்தவர்கள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு கொரோனாவைக் கொண்டுவந்தவர்களில் பாதிபேர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து மார்ச் 1 முதல் 190 விமானங்களில் 65,000க்கு அதிகமானவர்கள் இங்கிலாந்துக்கு வந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றும் தி டெலிகிராப் என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நாளொன்றிற்கு பாகிஸ்தானிலிருந்து இரண்டு விமானங்கள் இங்கிலாந்து வரும் நிலையில், சில நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வந்திறங்கும் சிலர் நேரடியாக மருத்துவமனைகளுக்கே சென்று தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் சுமார் 200,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளார்கள்.இப்படிப்பட்ட சூழலில், வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான் தான் என தகவல் வெளியானதையடுத்து, அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைகளுக்குள்ளாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.