பால் கொடுக்கும் 'ஆட்டுக்கிடாய்'... இந்த அதிசயத்துக்கு என்ன காரணம்?... ஏன் இப்படி ஆச்சு?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டுக்கிடாய் பால் கொடுக்கும் அதிசய சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
அனைத்து உயிரினங்களிலும் பெண்களுக்கே பால் கொடுக்கும் தன்மை இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் அதிசயங்கள் நிகழ்வது உண்டு. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆட்டுக்கிடாய் ஒன்று பால் கொடுக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ஆட்டுக்கிடாயின் ஓனர் ராஜீவ் குஷ்வாஹா கூறுகையில், '' இரண்டரை மாதத்தில் இந்த ஆட்டுக்கிடாயை வாங்கி வந்தோம். நாளடைவில் அதற்கு பால்மடி உருவாவதை கவனித்தோம். தற்போது நாளொன்றுக்கு 250 மி.லி பால் கொடுக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார்.
இந்த அதிசய சம்பவம் குறித்து விலங்குகள் நல மருத்துவர் கியான் பிரகாஷ் சக்சேனா, ''எப்போதும் தாயின் உடலில் ஆண், பெண் பாலின ஹார்மோன்கள் சம அளவில் இருக்கும். இதுதான் ஆண், பெண் உறுப்புகளைத் தீர்மானிக்கிறது. இந்த ஆட்டுக்கிடாயில் ஹார்மோன் சமநிலை குலைவினால் இப்படி ஆகியிருக்கும். ஆனால், இது அரிதினும் அரிது. லட்சத்தில் ஒன்று இப்படி பிறக்கும்,'' என விளக்கமளித்து இருக்கிறார்.