'ஏங்க... இப்படி பண்றீங்க?.. இது ரொம்ப கொடுமை'!.. இங்கிலாந்து வீரர் ஓலே ராபின்சன் பாலியல் சர்ச்சை!.. உணர்ச்சி வசப்பட்ட சச்சின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலே ராபின்சனுக்கு எதிராக இங்கிலாந்து வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஒலே ராபின்சன் மீது இங்கிலாந்து வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பியது. ஒலே ராபின்சன், தான் சிறு வயதில் செய்த தவறுக்காக அறிமுக போட்டியிலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஒலே ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் சாய்த்து அசத்தினார். அதே போல பேட்டிங்கில் 42 ரன்களும் அடித்திருந்தார். ஆனால், அவருக்கு பாராட்டிற்கு பதிலாக விமர்சனங்கள் தான் அதிகளவில் வந்தது.
அதற்கு காரணம், 8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அவற்றில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில கொச்சையான வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ராபின்சன் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
ஆனால், ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது மன்னிப்பை நிராகரித்து, அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. அதனால், அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒலே ராபின்சனுக்கு அதரவாக சச்சின் டெண்டுல்கர் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "ராபின்சன் அந்த ட்வீட்களை 8 வருடங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். முதல் டெஸ்டில் நன்றாக விளையாடிய அவருக்கு 2வது போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் தனது தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்ட பிறகும் நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அவருக்கு மீண்டும் அணியில் இடமளிக்க வேண்டும்.
ஒருவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவுடன் அதனை கடந்து செல்ல வேண்டும். அதுவும் கடமைக்காக அவர் கேட்கவில்லை. உளப்பூர்வமாக அடிமனதில் இருந்து உண்மையாக மன்னிப்பு கோரியுள்ளார். அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், ஒரு விளையாட்டு வீரருக்கு விளையாட தடைவிதிப்பது என்பது மிகப்பெரிய தண்டனை ஆகும்.

மற்ற செய்திகள்
