‘ஒரே போட்டியில் 327 ரன்கள்’.. சத்தமே இல்லாம கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 30, 2019 06:05 PM

நியூஸிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் டெவன் கான்வே (Devon Conway) என்ற வீரர் 327 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Devon Conway joins elite group with triple century on NZ soil

நியூஸிலாந்து நாட்டில் பிளங்கெட் ஷீல்ட் (Plunket Shield) என்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கேண்டர்பரி (Canterbury) மற்றும் வெலிங்டன் (Wellington) ஆகிய இரு அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் வெலிங்டன் அணியின் சார்பாக விளையாடிய டெவன் கான்வே என்ற வீரர் 300 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் 1991-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்த அவர் அந்நாட்டில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் நியூஸிலாந்து தேசிய அணியில் விளையாட விரைவில் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் வெலிங்டன் அணி 20/3 என்றும் பின்னர் 54/4 என்றும் தடுமாறி வந்தது. அப்போது களமிறங்கிய டெவன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை திணறடித்தார். 118 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 525 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் டெவன் கான்வே 334 பந்துகளில் 327 ரன்கள் எடுத்தார்.

Tags : #CRICKET #DEVONCONWAY #TRIPLECENTURY #NEWZEALAND