இதுல எப்படிங்க இவர் பேரை ‘மிஸ்’ பண்ணீங்க..? ஹர்பஜன் சிங் வெளியிட்ட லிஸ்ட்.. கொதித்த ‘கோலி’-ன் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கால் விராட் கோலியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. அதில், முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன், இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அதன்படி இந்தியா தனது கடைசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இன்று (08.11.2021) நம்பீயா அணியுடன் மோதியது. இப்போட்டிதான் விராட் கோலி கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நம்பீயா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி, 15.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் செயல் விராட் கோலி ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. அதில், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விருப்பமான டி20 ப்ளேயிங் லெவனை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், ஹர்பஜன் சிங்கும் தனது ப்ளேயிங் லெவனை அறிவித்தார்.
Guys, since the T20 flavour is on, I have given my All-time T20 XI on @Sportskeeda. Can your team beat mine? Share your team with me on sportskeeda pic.twitter.com/qf784RghSv
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2021
அதில் ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல், ஜாஸ் பட்லர், ஷேன் வாட்சன், ஏபிடி வில்லியர்ஸ், தோனி, பிராவோ, பொல்லார்டு, சுனில் நரேன், மலிங்கா, பும்ரா ஆகியோர் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். இதில் விராட் கோலியின் பெயர் இல்லாதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக இருக்கும் கோலியின் பெயரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காததற்காக ஹர்பஜன் சிங்கை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
