‘வெளிப்படையாவே சொல்றேன்’!.. இந்த ‘ரெண்டு’ விஷயம் யார்கிட்டயுமே இல்ல.. நொந்துபோன கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 23 ரன்களும் எடுத்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த சூழலில் நேற்றைய நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், போட்டி முடிந்தபின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), ‘கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் போதுமான அளவுக்கு நாங்கள் தைரியமாக விளையாடவில்லை. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் வீரர்களிடம் உத்வேகமும், துணிச்சலும் இல்லை. ஆனால் எங்களை விட நியூஸிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர்.
இந்திய அணிக்காக விளையாடும்போது நிறைய எதிர்பார்ப்புகளும், நெருக்கடிகளும் இருக்கும். அதனால் எப்போது விளையாடினாலும் அதிக அழுத்தம் இருக்கும். பல ஆண்டுகளாக அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதை ஒரு அணியாக செயல்படும்போது முறியடிக்க முடியும். ஆனால் கடைசி இரண்டு போட்டிகளிலும் நாங்கள் அதை செய்யவில்லை என்பதே உண்மை’ என விராட் கோலி விரக்தியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
