கடைசியில் இப்படி ‘கால்குலேட்டர்’ தூக்க வச்சிட்டாங்களே.. இந்த ‘அதிசயம்’ மட்டும் நடந்தால் இந்தியா அரையிறுதிக்கு போக வாய்ப்பு இருக்கு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்ல இந்திய அணிக்கும் இருக்கும் வாய்ப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 110 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால், அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனை அடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்தியாவின் நெட் ரன்ரேட் -1.0609 என உள்ளது. இந்த சூழலில் அடுத்தடுத்த போட்டிகளில் ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இந்தியா மோதுகிறது.
இந்த நிலையில், அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு இரண்டே வாய்ப்புதான் உள்ளது. அதில், ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று +3.097 ரன்ரேட் வைத்துள்ளது. அதனால் அந்த அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும். இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட் குறையும். இதனை அடுத்து ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் நெட் ரன்ரேட் +2.000 மேல் அதிகரிக்கும்.
இதுமட்டும் நடந்தால், இந்தியா அரையிறுதிக்கு சென்றுவிடமுடியாது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே இந்திய அணியின் அதிர்ஷடம் உள்ளது. அதில், ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து அணிகள் மோதும் போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியடைய வேண்டும். அப்போதுதான், இந்தியா, நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நெட் ரன்ரேட் அதிகம் உள்ள அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அதற்குதான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மெகா வெற்றி இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.
ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெகா வெற்றி, மற்ற மூன்று அணிகளுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றபின், நியூஸிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால், அரையிறுதி கனவை இந்தியா மறந்துவிட வேண்டியதுதான். இந்த அதிசயங்கள் எல்லாம் நடந்தால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.