‘ஏற்கனவே நிரூபிச்சிட்டாரு’.. பேசாம டி20 ‘கேப்டன்’ பதவியை இவர் கிட்ட கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கைகாட்டிய வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டும் ஒரு கோப்பையை கூட கைப்பற்றியதில்லை. இதுதான் விராட் கோலி மீது நீண்ட நாட்களாக விமர்சனமாக வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின், அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது. இதனை அடுத்து இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா கோப்பையை பறிகொடுத்தது.
இதனால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி, இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக உள்ளார். அதனால் இந்திய டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘என்னைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மாவிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்தால், அவர் நிச்சயம் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார். ஏற்கனவே தனக்கு கிடைத்த கேப்டன்சி வாய்ப்புகளில் எல்லாம் திறமையை நிரூபித்துள்ளார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா வெற்றிகரமான கேப்டனாக இருந்து வருகிறார். அதேபோல் ரிஷப் பந்த் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு துணைக்கேப்டன் பதவி கொடுக்கலாம்’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
