தொடர்ந்து பெஞ்சில் 'அமர' வைக்கப்படும் கேப்டன்... அதனால தான் 'வரிசையா' தோக்குறீங்க... ரசிகர்கள் சாபம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கனே வில்லியம்சன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் ஹைதராபாத் அணியால் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி தொடரில் முதல் வெற்றியை ருசி பார்த்தது. அதே நேரம் ஹைதராபாத் அணி 2-வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. பவுலிங் யூனிட் என புகழப்படும் அந்த அணி பேட்டிங்குடன் சேர்த்து பந்து வீச்சிலும் சொதப்போ சொதப்பல் என சொதப்பி வருகிறது.
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பினாலும் கூட அந்த அணியின் கேப்டன் வார்னர் நியூசிலாந்து அணியின் கேப்டனும், ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டனுமான கனே வில்லியம்சனை தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து வருகிறார். மிகவும் அனுபவசாலி, அணியை கரைசேர்க்க தயங்காமல் போராடக்கூடிய ஒரு கேப்டனை இப்படி பெஞ்சில் அமர வைப்பது நியாயமா? என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இதனால் தான் வரிசையாக அந்த அணி தோல்வியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் உரசல்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த புறக்கணிப்பு எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. அதே நேரம் சென்னை ரசிகர்கள் வில்லியம்சனை சென்னைக்கு வரும்படி தூதுவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Q- what's tough?
A- Seeing Kane Williamson like this 👇#KKRvSRH #IPL2020 pic.twitter.com/oHYAe493i0
— Abhijeet Paliwal (@abhijeet2510) September 26, 2020
We Want Back #KaneWilliamson 🥺🥺 Badly Missing This Guy Performance And Smile @SunRisers pic.twitter.com/lSNlKYVYsz
— Wahid (@Wahid49175168) September 26, 2020