‘இரட்டை அர்த்த ஐபிஎல் கமெண்ட்ரி சர்ச்சை!’.. விட்டு விளாசிய அனுஷ்கா ஷர்மா.. ‘அந்த அர்த்தத்துலயா நான் சொன்னேன்?’.. கவாஸ்கர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் ஆடிய ஐபிஎல் போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த இரண்டு கேட்ச்களை விராட் கோலி பிடிக்கத்தவறினார்.
இதனால் வர்ணனை பணியில் இருந்த சுனில் கவாஸ்கர் விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் ஒப்பிட்டு, “ஊரடங்கில், கோலி அனுஷ்கா ஷர்மாவின் பௌலிங்கை மட்டுமே எதிர்கொண்டு பயிற்சி செய்துள்ளார் போல, அதனால்தான் மைதானத்தில் திணறுகிறார்” என பேசியது சர்ச்சையாகியது. இதனை அடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் சுனில் கவாஸ்கரை கடுமையாக சாடியதுடன் வறுத்தெடுத்தனர்.
இதனால் பொறுமையிழந்த சுனில் கவாஸ்கர், தான் என்ன பேசினேன் என்பது குறித்து தற்போது விளக்கமளித்துதள்ளார். நான் பேசிய வார்த்தைகளை ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் எனக் கூறினார். இதுபற்றி அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட பதிவில், "மிஸ்டர் கவாஸ்கர்? மரியாதைக் குறைவானது உங்களுடைய கமெண்ட். கிரிக்கெட் வீரர் ஒருவரின் ஆட்டத்திற்கு அவரது மனைவியை குற்றன் சாட்டியதற்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பீர்கள் என நான் உறுதியாக இருக்கிறேன் வீரர்களுக்கு இணையான மரியாதையை எனக்கு மற்றும் எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என தோன்றவில்லையா உங்களுக்கு? 2020 வந்தாலும் எனக்கு எதுவும் மாறவில்லை. கிரிக்கெட்டுக்குள் என்னை இழுப்பதையும், இப்படி அத்துமீறிய கமெண்டுகளை கொடுப்பதையும் நிறுத்தப் போகிறீர்கள்" என பல கேள்விகளை கேட்டு விளாசினார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள சுனில் கவாஸ்கர், “நானும், ஆகாஷும் இந்தி சேனல் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு வர்ணனை பணியில் இருந்தபோது, கோலியின் தவறவிட்ட கேட்ச் பற்றி பேசிய ஆகாஷ், ஊரடங்கில் வீரர்கள் சரியாக பயிற்சி செய்திருக்க வாய்ப்பில்லை. அதனால், கோலி கேட்சை தவற விட்டிருக்கலாம் என கூறினார். அப்போது நான் இடைமறித்து, கோலி ஊடரங்கில் பயிற்சி செய்திருக்க வாய்ப்பில்லை. மிஞ்சிப் போனால் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் மட்டுமே கிரிக்கெட் விளையாட வாய்ப்பிருந்திருக்கும் என்பதால், அனுஷ்கா பந்து வீச, கோலி அடித்திருப்பார் என்கிற அர்த்தத்தில்தான் பேசினேன். தவிர வேறு என் பேச்சில் வேறு உள்நோக்கம் இல்லை” என விளக்கியுள்ளார்.