"அடுத்த மேட்சுல கொஞ்சம்... இத பண்ணிட்டு வெளையாட வாங்க"... 'வம்புக்கிழுத்த சேவாக்'... 'கொந்தளிப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணி வீரர்களின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் சேவாக் கிண்டல் செய்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பலம்வாய்ந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிராக 2 தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் அமைந்துள்ள நிலையில், ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடாதது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
மேலும் முதலில் இறங்கும் வீரர்கள் அனைவரும் மிகவும் மெதுவாக ரன்களை சேர்ப்பதால் கடைசியில் இறங்கும் வீரர்களுக்கு அதிக ப்ரஷர் ஏற்படுகிறது எனவும், சிஎஸ்கே வீரர்களிடம் பழைய பார்ம் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களின் ஆட்டத்தை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் சேவாக் தன் ட்விட்டர் பதிவில், "சிஎஸ்கேவின் பேட்டிங் சரியாக இல்லை. அவர்கள் அதிரடியாக ஆடுவது இல்லை. அடுத்த போட்டியில் மைதானத்திற்கு பேட்டிங் செய்ய வருவதற்கு முன் அவர்கள் கொஞ்சம் குளூக்கோஸ் குடித்துவிட்டு வர வேண்டும்" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். சேவாக்கின் இந்த கமெண்ட் சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai ke batsman simply not getting going. Glucose chadwaake aana padega next match se batting karne.
— Virender Sehwag (@virendersehwag) September 26, 2020

மற்ற செய்திகள்
