இதுதான் 'பேர்வெல்' மேட்ச்... அதான் அடிக்கடி 'அவர' கேமரால காட்டுறாங்க... விளாசும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. அதுவும் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்ததை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதையடுத்து மீம்ஸ் போட்டு ரசிகர்கள் சென்னை அணியை தாளித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழக வீரர் முரளி விஜயின் ஆட்டம் ரசிகர்களுக்கு உவப்பானதாக இல்லை. தொடர்ந்து வரிசையாக 3 போட்டிகளிலும் அவரது ஆட்டம் பெரிதாக எடுபடவில்லை. இதுபோல பீல்டிங்கிலும் பெரிதாக சாதிக்கவில்லை. இன்றைய போட்டியில் கூட 1 ரன் போக வேண்டிய இடத்தில் 2 ரன்களை அவர் விட்டு கொடுத்தார். இதைப்பார்த்த தோனி லேசாக டென்சன் ஆனார்.
இந்த நிலையில் இதுதான் அவரது கடைசி மேட்ச் என்பதால் அவரது முகத்தை கேமராமேன் அடிக்கடி காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல ருத்ராஜ், கேதார் ஆகியோரையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக ராயுடு, பிராவோ இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
The cameraman is focusing on Murali Vijay because this is his farewell match. #CSKvDC
— Sagar (@sagarcasm) September 25, 2020
வேலைக்கு ஒருத்தர எடுத்தாக்கூட, இதுதான்ப்பா உன் role நீ இதெல்லாம்தான் பண்ணவேண்டி இருக்கும்னு சொல்லித்தான் எடுப்பாங்க
ஆனா Murali vijay-அ teamla எடுக்கும் போது எதும் சொல்லல போல... Enna rolenu அவருக்கும் தெரில, நமக்கும் புரில#csk #Muralivijay #vijay #CSKvsDD #cskvsdc #DCvsCSK #thala pic.twitter.com/FUxnFmptIw
— Vijay ravanan (@VijayRavanan) September 25, 2020
Murali vijay 😬😬 #CSKvsDD #CSK #cskvsdc #IPL2020 #iplmemes @ChennaiIPL @CSKteamFC @DelhiCapitals pic.twitter.com/Bn9z3scwow
— Pratheep_Editor (@pratheep_editor) September 25, 2020

மற்ற செய்திகள்
