'கேப்டன் மார்வெல' கூப்பிடுங்க விளாசும் ரசிகர்கள்... அவரு மறுபடியும் உள்ள வருவாரா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்தடுத்து வரிசையாக 2 போட்டிகளில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. முதல் போட்டியில் வென்றாலும் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பவுலிங் வரிசை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. தொடர் ஆரம்பிப்பதற்கு முன் ஹர்பஜன் சிங், ரெய்னா இருவரும் சென்னை அணியில் இருந்து விலகினர். ஆனால் அவர்களுக்கான மாற்று வீரர்களை சென்னை அணி இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பார்த்து கவலை அடைந்த ரசிகர்கள் ரெய்னாவை மீண்டும் அழைக்க வேண்டும் என சென்னை அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவெஞ்சர்ஸ் படத்தில் கேப்டன் மார்வெல் சிறிது காலம் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் உள்ளே வருவார் அதற்கு பின் தான் படம் சூடு பிடிக்கும். அதேபோல சென்னை அணியின் கேப்டன் மார்வெல் ரெய்னாவை மீண்டும் கூப்பிட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
3 போட்டிகள் முடிந்த பின்னும் ரெய்னா குறித்து தோனி இதுவரை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை என்பதால் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லை சென்னை அணி அவரை டீமில் இருந்து விடுவித்து விடுமா? என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்து வருகின்றனர். சென்னை அணியின் ஒன் டவுன் வீரராக களமிறங்கி பல போட்டிகளில் சென்னை அணியை ரெய்னா கரை சேர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@IPL sir , what is the procedure to bring back #Raina to the team @chennaiIPL 😑😑 pic.twitter.com/Xf3PvDrtCR
— Nishanth Ragu (@nishanthragu15) September 25, 2020
#Csk : #Raina Engaa Da Irukka.. #IPL2020 pic.twitter.com/rD5oG8taVC
— Siva Chidambaram (@Sivacram_) September 25, 2020
#Raina plz come back ipl Mr ipl 🙏@ImRaina #SureshRaina #CSK pic.twitter.com/7C63Eh9PVT
— @Call_Me_King* (@SINGAIRAJAMA) September 25, 2020
Pls comeback thalaivaaa @ImRaina 😔😭💔#Raina #chinnathala pic.twitter.com/angt974Yei
— தளபதி சுரேஷ் (@Rainasuresh31) September 25, 2020
Miss you #Raina 💔 @ImRaina pic.twitter.com/wDnoRuMKyW
— Móhan (@MohanMba02) September 25, 2020

மற்ற செய்திகள்
