VIDEO: 'ஈ சாலா கப் நமதே'... பெங்களூர் அணியை கிண்டல் செய்த இளம் 'கேப்டன்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, விராட்டின் பெங்களூர் அணியை துவைத்து காயப்போட்டு 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருத்ரதாண்டவம் ஆடிய ராகுல் 132 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தார். ராகுல் அடித்த ரன்களை கூட அடிக்காமல் பெங்களூர் அணி ஆல்-அவுட் ஆகி ரசிகர்களை கதற வைத்தது.

இந்த நிலையில் கே.எல்.ராகுலும், கருண் நாயரும் சேர்ந்து பெங்களூர் அணியை கிண்டல் செய்த பழைய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. வீடியோவில் கருண் நாயர், ''நீங்கள் என்ன சொல்ல வேண்டும்? என கேட்கிறார். பதிலுக்கு ராகுல், '' ஈ சாலா கப் நமதே'' என பதில் அளிக்கிறார். 2 வருடங்களுக்கு முன் கொல்கத்தா ஈடன் கார்டனில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை வீழ்த்திய போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் இதை மறுபடியும் வைரல் செய்து பெங்களூர் அணியை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் பழைய டெம்ப்ளேட் மீம்ஸ்களையும் தூசு தட்டி எடுத்து விராட்டின் அணியை கலாய்த்து வருகின்றனர். எனினும் தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்கள் இருப்பதால் பெங்களூர் அணி அடுத்த போட்டியில் பார்முக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KL beats RCB by 23 runs. #IPL2020 #KXIPvRCB pic.twitter.com/saAGvto7MX
— Srini Mama (@SriniMaama16) September 24, 2020
— FB (@FaizalBabu_M) September 24, 2020
எல்லாரும் என்ன ஏமத்துறங்க pic.twitter.com/QSdkDCQjR6
— CSK 🄽🄰🅅🄰🅂 (@N_A_V_A_S) September 24, 2020
KL beats RCB by 23 runs. #IPL2020 #KXIPvRCB pic.twitter.com/saAGvto7MX
— Srini Mama (@SriniMaama16) September 24, 2020

மற்ற செய்திகள்
