அவரு டீமுக்கு வரவேண்டிய 'நேரம்' வந்துருச்சு... வெளிப்படையாக பேசிய தோனி... எப்போ வரப்போறாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி பெரிதாக போராடாமல் சரணடைந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் சென்னை அணியை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். 20-20 கிரிக்கெட் போட்டியை டெஸ்ட் மேட்ச் போல சென்னை வீரர்கள் ஆடியதை பார்த்து ரசிகர்கள் பலரும் டிவியை அணைத்து விட்டு தூங்க சென்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முதல் போட்டியில் வெறித்தனமாக ஆடிய அம்பாதி ராயுடுக்கு தொடர்ந்து 2 போட்டிகளாக தோனி வாய்ப்பு வழங்கவில்லை. 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்து உள்ளது. இதனால் அடுத்த போட்டியில் சில முக்கிய மாற்றங்கள் சென்னை அணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முரளி விஜய், கேதார் ஜாதவ், ருத்ராஜ் ஆகியோரை நீக்கிவிட்டு ராயுடு, பிராவோ ஆகியோருக்கு தோனி வாய்ப்புகள் அளிப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அம்பாதி ராயுடு அணியில் இணைய வேண்டிய நேரம் வந்து விட்டதாக சென்னை அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து தோனி, '' இது ஒரு நல்ல போட்டி என நான் நினைக்கவில்லை. பேட்டிங் வரிசை நிறைய ஏமாற்றம் அளிக்கிறது. மெதுவான துவக்கம் ரன்ரேட்டை அதிகரித்து அடுத்து வருபவர்களுக்கு பிரஷரை ஏற்படுத்துகிறது. ஒரு தெளிவான திட்டத்துடன் நாங்கள் அடுத்த போட்டியில் திரும்பி வரவேண்டும்.
அடுத்த போட்டியில் ராயுடு ஆடும்போது பேட்டிங் ஆர்டர் ஒரு சமநிலையுடன் இருக்கும். இது ஒரு கூடுதல் பந்துவீச்சாளருடன் பரிசோதனை செய்ய எங்களுக்கு இடமளிக்கும்,'' என தெரிவித்து இருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் சென்னை அணியின் பாகுபலி என புகழப்படும் அம்பாதி ராயுடு அணிக்கு திரும்புவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரம் ரெய்னா குறித்த சென்னை அணி என்ன திட்டம் வைத்துள்ளது என்பது தெரியவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து ரெய்னா அணிக்கு திரும்ப வரவேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.