"தல ஒரு ஆட்டோகிராஃப்".. ரசிகர் வச்ச கோரிக்கை.. நெகிழ வச்ச தோனி.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான தோனி தனது ரசிகர் ஒருவருக்கு ஆட்டோகிராஃப் போடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | மேட்ச் முடிஞ்ச அப்புறம் கைகுலுக்க போன ஸ்டோக்ஸ்.. விலகிப்போன பாக். வீரர்.. என்ன ஆச்சு?.. வீடியோ..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோதிலும் தோனிக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களை நெகிழ செய்திருக்கிறது. இந்த வீடியோவில் தெருவில் நடந்து செல்லும் தோனியிடம் ரசிகர் ஒருவர் பேசுகிறார். அப்போது, தான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில் கையெழுத்து போட்டுக்கொடுக்குமாறு அந்த ரசிகர் கோரிக்கை வைக்கிறார்.
இதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் தோனி, அந்த ரசிகரின் டி-ஷர்ட்டில் கையெழுத்து போடுகிறார். இந்த வீடியோ தோனி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. அண்மையில், கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ஒரு போட்டியின்போது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியுடன் ரசிகர் ஒருவர் நின்றிருந்த புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
One Lucky fan gets autograph on shirt by MS Dhoni 🥵🔥
Me when @msdhoni 🥺?#MSDhoni pic.twitter.com/nIf9IPdY0Q
— DHONI Empire™ (@TheDhoniEmpire) December 11, 2022

மற்ற செய்திகள்
