"CSK-வின் அடுத்த கேப்டன் இவருதான்".. ஆருடம் சொன்ன வாசீம் ஜாஃபர்.. தோனியின் இடம் பத்தி சொன்ன தகவலால் பரபரக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக யார் இருக்க போகிறார் என்பது பற்றி பேசியிருக்கிறார்.
Also Read | மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை..! உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கேரளாவில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், எந்தெந்த வீரர்களை விடுவித்துள்ளார்கள் என்பது குறித்தும் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது.
ஐபிஎல் துவக்க ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் தோனி. கடந்த சீசனில் ஜடேஜாவிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தொடரின் நடுவே, மீண்டும் தோனியிடம் கேப்டன் பதவியை ஜடேஜா ஒப்படைத்திருந்தார்.
இந்நிலையில், வாசிம் ஜாஃபர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியிருக்கிறார். அப்போது, சென்னை அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜாஃபர்," தோனிக்குப் பிறகு CSK-ஐ வழிநடத்தப் போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவனம் இருக்கும் என நினைக்கிறேன். கெய்க்வாட் அந்த இடத்தில் இருப்பார். ஏனெனில் அவர் இளைஞர். மஹாராஷ்டிரா அணிக்கும் கேப்டனாக இருக்கிறார். ஆகவே அவருக்கு முக்கிய பொறுப்புகளை அந்த அணி வழங்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.
மேலும், தோனிக்கு பிறகு டிவோன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படலாம் எனவும் ஜாஃபர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"சென்னை அணி டிவோன் கான்வேயை கீப்பராக நியமிக்கலாம். தோனியிடம் வேறு திட்டங்களும் இருக்கக்கூடும். அதுபற்றி தெரியவில்லை" என்றார்.
2023 ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் குறித்து ஜாஃபர் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | மீண்டும் ஆட்டத்தை துவங்கும் மழை.. மணிக்கு 65 கிமீ வரையில் காற்று.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!