சோழர்களாக மாறிய சிஎஸ்கே வீரர்கள்??.. பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு பேரும் வெச்சிருக்காங்க..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் தொகுப்பை அடிப்படையாக கொண்டு, பிரபல இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", இன்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், லால், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
ரவிவர்மன் ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள நிலையில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பல வருடங்களாக பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக வர வேண்டும் என ஏராளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை நிஜமாக மாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம். மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன நேரம் முதல் சமூக வலைத்தளம் முழுக்க இந்த படம் தொடர்பான பதிவுகளை தான் காண முடிகிறது.
பலரும் இது தொடர்பான மீம்ஸ் மற்றும் வித்தியாசமான போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி ஆக்கபூர்வமான முறையில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பொன்னியின் செல்வன் படத்துடன் ஒப்பிட்டு தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
ஐபிஎல் தொடரில், அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ள அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே பார்க்கப்பட்டு வருகிறது. தோனி தலைமையில் ஆடி வரும் சிஎஸ்கே, ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாகவும் விளங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்துடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒன்றை சிஎஸ்கே அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், சிஎஸ்கே வீரர்களான தோனி, ஜடேஜா, ரெய்னா மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஆகியோர் போர் வீரர்கள் போல இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பொன்னியின் செல்வன் போல "சென்னையின் செல்வன்ஸ்" என்றும் பெயரை குறிப்பிட்டுள்ளனர். அரச கதாபாத்திரங்கள் போல சிஎஸ்கே அணியினர் இருக்கும் இந்த போஸ்டர், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மற்ற செய்திகள்
