ஒரே லைனில் தோனி சொன்ன விஷயம்.. வேற லெவல் உற்சாகத்தில் CSK ரசிகர்கள்!!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் எம்.எஸ். தோனி. 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்களின் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தி உள்ளது.

Also Read | "இதுக்கு எல்லாம் 4 ரன் குடுப்பீங்களா?".. நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்ட சிராஜ்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வலம் வரும் தோனி தலைமையில், இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் பலம் வாய்ந்த அணியாகவும் சிஎஸ்கே கருதப்படும் நிலையில், இந்த ஆண்டு நடந்து முடிந்த சீசன், அவர்களுக்கு மோசமான ஒன்றாகவே அமைந்து விட்டது. புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடம் பிடித்து வெளியேறி இருந்த சென்னை, அடுத்த ஆண்டு நிச்சயம் பழைய ஃபார்முக்கு திரும்பி வரும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது தோனி பேசியுள்ள விஷயம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில், சென்னை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய தோனி, "அடுத்த ஆண்டு சேப்பாக் திரும்பி வருவோம்" என குறிப்பிட்டு பேசி உள்ளார்.
இதனைக் கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் கடும் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் வேறு மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வந்தது. இதனால், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் எதுவும் கடந்த சில சீசன்களாக நடைபெறவில்லை.
அப்படி இருக்கையில், அடுத்த ஆண்டு சென்னையில் சந்திக்கலாம் என தோனி தெரிவித்துள்ள விஷயம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வினை அறிவிப்பார் என்ற கருத்து தொடர்ந்து நிலவி வரும் நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய பிறகு தான் தனது ஓய்வினை அறிவிப்பேன் என்றும் தோனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
