"உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே".. தோனி டான்ஸ்க்கு ரஞ்சிதமே பாட்டை MIX செய்த CSK அணி! வைரலாகும் பார்ட்டி வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்தோனியின் சமீபத்திய வீடியோவை வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுடன் மிக்ஸ் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை சர்வதேச அளவில் இந்தியாவிற்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தன்னுடைய தோழியான சாக்ஷியை தோனி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஸிவா என்ற பெண் குழந்தை உள்ளது.
பொதுவாக தோனியின் பிரதானமான குணம் எந்த சூழ்நிலையிலும் மிகவும் பொறுமையுடன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி செல்வதே. பேட்டிங் செய்யும் போதும் சரி, கையில் கிளவ்ஸ் உடன் ஸ்டம்புகளுக்கு பின்புறம் நிற்கும் போதும் சரி, அவருடைய இலக்கு வெற்றியாக மட்டுமே இருக்கும்.
சமீபத்தில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது பிளாட்டின விழாவில் தோனி கலந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாய் நிறுவனம் இந்தியா சிமெண்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கிரிக்கெட் வீரர் தோனி கலந்து கொண்ட இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலானது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி, சாக்ஷி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தனியார் பார்ட்டியில் ஆடும் வீடியோ காட்சிகளை, நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு'படத்தின் ரஞ்சிதமே பாடலுடன் மிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். "உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே" எனும் குரல் சாக்ஷி பின்னணியில் ஒலிக்க, நடிகர் விஜய் பதிலியாக தோனி ஆடுவது போல வீடியோ வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
