VIDEO: ‘சிராஜ் வழி எப்பவுமே தனி வழிதான்’.. பந்தை பாலிஷ் பண்ண இப்படியொரு ‘டெக்னிக்’ இருக்குதுபோல..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான முதல் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 36 ரன்களில் அவுட்டாக, அடுத்த வந்த புஜாரா 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இந்த சமயத்தில் கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த ரஹானேவும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ரிஷப் பந்த் 25 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா அதிரடியாக விளையாடி அரைசதம் (56 ரன்கள்) அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, 278 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தற்போது உலகம் முழுவது கொரோனா பரவல் அச்சுறுத்தி வருவதால், கிரிக்கெட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எச்சிலை தொட்டு பந்தை பாலிஷ் செய்வதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. அதனால் வீரர்கள் அவர்களது வியர்வைக் கொண்டு இதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்போட்டியில் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் நெற்றியில் இருந்து வியர்வை எடுத்து முகமது சிராஜ் பந்தில் தடவிய வீடியோ இணையத்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.