சிராஜ் வீசிய பந்தால் கை ‘விரலில்’ பலத்த அடி.. விலகும் ‘தமிழக’ வீரர்? இந்திய அணிக்கு பெரிய சிக்கல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயிற்சி ஆட்டத்தில் முகமது சிராஜ் வீசிய ஓவரில் தமிழக வீரருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த தொடர் தொடங்க உள்ளது.
அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் இங்கிலாந்து கவுண்டி அணிக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. தர்ஹாம் மைதானத்தில் இப்போட்டி மும்முறமாக நடைபெற்று வருகிறது.
Siraj vs Sundar 🤯🔥 pic.twitter.com/v396i8PJvH
— msc media (@mscmedia2) July 21, 2021
இந்த நிலையில் இப்போட்டியில் தமிழக வீரரும், இந்திய அணியின் ஆல்ரவுண்டருமான வாசிங்டன் சுந்தர் பேட்டிங் செய்தபோது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்து வீசினார். அப்போது சிராஜ் வீசிய பந்து ஒன்று சுந்தரின் கை விரலில் பலமாக அடித்தது. இதனால் அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காயம் குணமடைய 5 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாசிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயத்தால் வெளியேறினர். தற்போது வாசிங்டன் சுந்தரும் காயத்தால் விலகுவதால் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
News Credits: The Indian Express