‘தோனிக்கிட்ட, நான் எதிர்பார்ப்பது இதைத்தான்’... 'முன்னாள் கேப்டனின் விருப்பம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 23, 2019 11:30 AM

நீங்கள் எப்பொழுது விளையாண்டாலும், அதிரடியாக விளையாட வேண்டும் என்று தோனிக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mohammed Azharuddin has a request for MS Dhoni

உலகக் கோப்பை தொடர் முடிந்து, இந்திய அணியின் அடுத்த தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு வரை வந்தவிட்டநிலையிலும், தோனி தொடர்பான பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனிடம், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த அசாருதீன், ‘ஒரு கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாட விரும்பும் பட்சத்தில், தேர்வுக் குழுவினர் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும். எத்தனை காலம் விளையாட விரும்புகிறீர்கள், எப்படி விளையாடுவீர்கள், ஆட்டத்தில் உங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் போன்ற கேள்விகளை அவர்கள் முன்வைக்கவேண்டும். சிறந்த வீரர் என்றால், அவர்களும் தங்கள் கருத்தினை தன்னம்பிக்கையுடன் கூற வேண்டும்.

ஏதேனும் ஒரு முடிவு வெளியாகித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால்,  டோனி ஓய்வு எடுப்பார், எடுக்கமாட்டார் என மாறி மாறி, மக்கள் பேசத்தான் செய்வார்கள். ஏனென்றால், தோனியிடம் இருந்து இதற்கெல்லாம் எந்த பதிலும், இன்னும் வரவில்லை. நூறு சதவிகிதம் உடல் தகுதி, பேட்டிங் திறமை மாறாமல் அப்படியே இருந்தால், அவர் தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன். சில நேரங்களில் அதிகமாக விளையாடிவிட்டால் ஆர்வம் குறையும். அப்படி இல்லை என்றால் விளையாடலாம்.

ஆனால், நான் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே தோனிக்கு விடுக்கிறேன். நீங்கள் விளையாடும்போதெல்லாம், அதே ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும். வயதானால் சில சமயங்களில் ஆட்டம் மந்தமாக இருக்கும். ஆனால், உங்கள் ஆட்டம் அப்படி மந்தமாகிவிட்டதாக தெரியவில்லை. உங்கள் இயல்பான ஆட்டத்தால் நிறையப் போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அப்படியே விளையாடினால் அணிக்கு சிறப்பாக அமையும். தோனி, 2 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, அதற்குப் பின்னர் அவர் தனது முடிவினை அறிவிப்பார். எப்பொழுத எடுத்தாலும் அவர் தெளிவான முடிவெடுப்பார் என நினைக்கிறேன் என்று கூறினார்.

Tags : #MSDHONI