தல தோனியின் மகள் ஜிவாவுக்கு மெஸ்ஸி அனுப்பி வச்ச ஸ்பெஷல் GIFT.. வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா-விற்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அனுப்பியிருக்கிறார். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், கத்தாரில் துவங்கிய இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பம் முதலே பரபரப்புடன் சென்றது. இதில், அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. இதில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பிரான்ஸை வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையில் முதன்முறையாக அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றது. இது உலக கால்பந்து ரசிகர்களை கொண்டாட செய்தது. இதை தொடர்ந்து தனது ஓய்வு முடிவை கைவிடுவதாக மெஸ்ஸி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா-வுக்கு மெஸ்ஸி அர்ஜென்டினா அணியின் டி-ஷர்ட்டை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். அந்த டி-ஷர்ட்டில் "ஜிவாவுக்காக" (PARA ZIVA) என எழுதப்பட்டிருக்கிறது. மேலும், அதில் மெஸ்ஸி கையெழுத்திட்டிருக்கிறார்.
இந்நிலையில், மெஸ்ஸி அனுப்பிய டி-ஷர்ட்டை தான் அணிந்திருக்கும் புகைப்படங்களை ஜிவா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"தந்தையை போல மகள்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
