'மயங்க் அகர்வால்' ஷேர் செய்த 'போட்டோ'... அதுல வந்த 'கமெண்ட்'... 'வயிறு' வெடிக்க சிரித்த 'நெட்டிசன்கள்'... "அப்படி என்னவா இருக்கும்??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 01, 2021 05:02 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி 2 - 1 என்ற முன்னிலையில் உள்ளது.

mayank agarwal shares photo james neesham comments make laugh

இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அதே வேளையில், இங்கிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அதில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துடன் இறுதி போட்டியை ஆடும். அப்படி இல்லாமல், இந்திய வெற்றி பெற்றாலோ அல்லாது போட்டி டிராவில் முடிந்தாலோ, இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

mayank agarwal shares photo james neesham comments make laugh

இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே பாக்கியுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தின் பிட்ச், அதிகம் விமர்சனத்துக்குள் ஆகி வருகிறது. அடுத்த டெஸ்ட் போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள மயங்க் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

mayank agarwal shares photo james neesham comments make laugh

'ஒவ்வொரு நாளும் நீங்கள் முயற்சியை மேற்கொண்டு வரும் போது தான் மாற்றங்கள் நிகழும்' என கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். மிகவும் உத்வேகத்துடன் மயங்க் அகர்வால் பதிவிட்ட புகைப்படத்தின் கீழ் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் செய்த கமெண்ட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

mayank agarwal shares photo james neesham comments make laugh

 

மயங்க் அகர்வால் பகிர்ந்திருந்த புகைப்படத்தின் போஸை வைத்து, ஜிம்மி நீஷம், 'வாழ்த்துக்கள். ஆணா? பெண்ணா?' என நக்கலாக கமெண்ட் செய்துள்ளார். அவர் இந்த கமெண்ட் செய்த சில நிமிடங்களிலேயே, நெட்டிசன்களிடம் இது அதிகம் வைரலானது.

எப்போதும், தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் காமெடியாக ஏதேனும் கருத்து அல்லது கமெண்ட்டை தெரிவித்து வரும் நீஷம், தற்போதும் அதே போன்று ஒரு சம்பவத்தை செய்துள்ள நிலையில், இதுவும் நெட்டிசன்களை அதிகம் சிரிக்க வைத்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mayank agarwal shares photo james neesham comments make laugh | Sports News.