'சுபஸ்ரீ மரணம்' குறித்த பேச்சு...படம் ஓடுவதற்காக 'விஜய்' அரசியல் பேசுகிறார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 20, 2019 03:15 PM
நடிகர் விஜய் நேற்றிரவு நடைபெற்ற பிகில் ஆடியோ விழாவில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.செய்தி சேனல்கள் அனைத்திலும் நடிகர் விஜய் பேசியதே தலைப்பு செய்தியாக உள்ளது.
விழா மேடையில் நடிகர் விஜய் பேசுகையில்,''பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள்.இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹேஷ்டாக் போடுங்க.சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க,''என தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து #JusticeForSubaShree என்னும் ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்,''விஜய் தனது படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் அரசியல் பேசுகிறார்.சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.அதைப்போல யாரை எங்கே வைக்க வேண்டுமோ,அங்கே வைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கேதான் தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதில்,எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை.நடிகர் விஜய் தனது படங்களை பரபரப்பு அரசியலுக்கு உள்ளாக்குவதற்காக ஒரு ஒத்திகையை இதுபோன்ற விழாக்களில் பேசி வருகிறார் என்பதுதான் உண்மை,''என தெரிவித்துள்ளார்.
அதே நேரம் திமுக செய்தித்தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நடிகர் விஜய் துணிச்சலாக ஆளுங்கட்சியை விமர்சித்து உள்ளதாக பாராட்டி இருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,''நடிகர் விஜய் இந்த மாதிரி தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை வரவேற்கிறேன்.இது பிளக்ஸ் போர்டு பிரச்சனையை மட்டும் சார்ந்ததில்லை. அரசாங்கம் செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கும் துணிச்சல் விஜய்க்கு உள்ளதை பாராட்டுகிறேன்,''என பாராட்டி இருக்கிறார்.