"கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம கேக்குறீங்க..." நிருபர் கேட்ட 'கேள்வி'... கடுப்பாகி 'கோலி' அளித்த 'பதில்'... 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.
இதன் முதல் போட்டி, இன்று மாலை 7 மணியளவில் அகமதாபாத் மைதானத்தில் வைத்து ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடருக்காக, ஐபிஎல் தொடரில் ஜொலித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். பல திறமையான வீரர்கள் இந்திய அணியில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில், எந்த 11 பேர் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக, டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். அவர் டி 20 தொடரிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணி அறிவிக்கப்பட்ட போது அவரது பெயர் இடம்பெறவில்லை. கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிய அஸ்வின், மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.
ஆனாலும், அவருக்கு குறைந்த ஓவர்களில் அணியில் இடம் கிடைப்பதில்லை. கடைசியாக, கடந்த 2017 ஆம் ஆண்டில் தான் அவர் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடியிருந்தார். இந்நிலையில், டி20 போட்டிகளில் அஸ்வின் எப்போது திரும்ப களமிறங்குவார் என இந்திய கேப்டன் கோலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியால், கோலி சற்று கோபமடைந்துள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, இதற்கு பதிலளித்த கோலி, 'உங்களது கேள்வியில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடி வருகிறார். ஒரே திறமை மற்றும் ஸ்டைல் கொண்ட இரு வீரர்களை எப்படி அணியில் சேர்க்க முடியும்?.
சுந்தர் சிறப்பாக செயல்பட தவறினால், அவர் இடத்தில் வேறு வீரரை ஆட வைக்கலாம். ஆனால், அவர் அற்புதமாக ஆடி வருகிறார். கேள்வி கேட்பது சுலபம். ஆனால், அதற்கு ஒரு தகுந்த விளக்கம் இருக்க வேண்டும். அப்படி நீங்கள் கூறுவதை போல அஸ்வினை ஆட வைக்க வேண்டும் என்றால் எந்த இடத்தில் ஆட வைப்பது?' என கோலி பதில் தெரிவித்துள்ளார்.
கம்பீர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள், அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.