மேட்சையே திருப்பி போட்ட அந்த 'ஓவர்'... அதற்கு மத்தியில் மோதிக் கொண்ட 'கோலி' - 'பட்லர்'... பரபரப்பைக் கிளப்பிய 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டி 20 போட்டி, இன்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும், இடையே சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்ததால், அந்த அணியால், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 - 2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்தியாவின் கடின இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினாலும், அதன்பிறகு கைகோர்த்த ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால், இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் ஒரு சமயம் அதிகரித்தது.
ஆனால், 13 ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வரின் பந்து வீச்சில், பவுண்டரி அடிக்க எண்ணி, ஓங்கி அடித்த பட்லர், சிக்ஸ் லைனுக்கு அருகே பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இத்துடன் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பிய நிலையில், பட்லர் அவுட்டாகி நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்திய கேப்டன் கோலி மற்றும் பட்லருக்கு இடையே, சிறிதாக வாக்குவாதம் நடந்தது.
Bhuvneshwar ki मक्खन गेंदबाजी पर फिसल गए Butler 😜#INDvsENG pic.twitter.com/MI0i9HaQEZ
— pakas2009@gmail.com (@pakas2009) March 20, 2021
What a send off man @imVkohli . This fuc*ing 30 second aggression is enough for us 😍 pic.twitter.com/5czk8vIsIF
— Surya (@SuryaRCB1) March 20, 2021
பட்லரின் விக்கெட்டை இந்திய வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த போது, கோலி, பட்லரை நோக்கி வேகமாக ஏதோ பேசிக் கொண்டே, நடந்து சென்றார். பதிலுக்கு, பட்லரும் வசைபாட, இந்த சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. கோலி - பட்லர் இடையேயான வாரத்தைப் போர் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
