"இத மட்டும் எப்படி பக்காவா பண்றீங்க??... 'கோலி'ய பாத்ததும் நான் கேக்க போற 'விஷயம்'.." இளம் வீரர் பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றிருந்த நிலையில், இதில் சில இளம் வீரர்களும், எதிர்பாராத வகையில் ஏலம் போயினர். அதில், இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் உள்ளவர் இளம் வீரர் முகமது அசாருதீன் (Mohammed Azharuddeen). கேரளாவைச் சேர்ந்த வீரரான இவரை, பெங்களூர் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்திருந்த சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் கேரள அணிக்காக ஆடிய முகமது அசாருதீன், 54 பந்துகளில் 137 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இவரது இந்த இன்னிங்ஸ் மூலம், நிச்சயம் ஐபிஎல் தொடரில் தேர்வாவார் என அப்போதே எதிர்பார்ப்பு ஒன்று உருவானது. அது நிஜமாகும் வகையில், அவரை பெங்களூர் அணி சொந்தமாக்கியது.
ஐபிஎல் தொடருக்காக தேர்வானதை எண்ணி ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அசாருதீன், தனக்கு மிகவும் பிடித்த வீரரான கோலியின் தலைமையில் இணையவுள்ளதை எண்ணி, மேலும் குதூகலத்தில் உள்ளார். கோலியுடன் இணைந்து ஆடுவது குறித்து, ஏற்கனவே பல முறை பேசியுள்ள அசாருதீன், தன்னுடைய ரோல் மாடலிடம் இருந்து தான் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தற்போது பேசியுள்ளார்.
'தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கிரிக்கெட் வீரராக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?. இது தான் நான் கோலி அவர்களிடம் கேட்க விரும்பும் முதல் விஷயம். அனைவரும், இந்திய அணிக்காக ஒருமுறை ஆட வேண்டும் என விருப்படுகிறோம். ஆனால், அதற்காக நாம், தொடர்ந்து சீரான அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த கேப்டன் கோலி தான். அதே போல, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், 50 க்கு அதிகமாக சராசரியையும் அவர் வைத்துள்ளார்.
இது நம்ப முடியாத ஒன்று. இதனால், ஒரு நிலையான கிரிக்கெட் வீரராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விராட் கோலியிடம் கேட்க விரும்புகிறேன்' என அசாருதீன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
