'எங்களுக்கு தாய்நாடு இந்தியாவா இல்லாம இருக்கலாம்.. ஆனாலும் நாங்க கோலி ஃபேன்ஸாக்கும்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 11, 2019 02:11 PM
அண்மையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், லண்டனில் நடந்த விழா ஒன்றில் பேசினார். பேச்சின்போது, இந்திய கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் புகழ்ந்தார். விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல ஃபிட்னெஸிலும் சூப்பர். பாகிஸ்தானில் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பலருக்கு விராட் கோலி கனவு நாயகன் என்று இந்திய கேப்டனுக்கு மொயின்கான் புகழாரம் சூட்டினார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியின் விராட் 18 என்கிற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை பாகிஸ்தானில் பலரும் விரும்பி அணிகின்றனர். அவ்வகையில் பச்சை நிறத்தில் இருக்கும் இந்த ஜெர்ஸியை அணிந்தபடி லாகூரில் பைக்கில் செல்லும் ஒரு இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக பாகிஸ்தான் முன்ன்னாள் கேப்டன் மோயின் கான், லண்டனில் நிகழ்ந்த விழா ஒன்றில், ஃபிட்னஸ் ரீதீலும் பேட்டிங் ஸ்டைலிலும் கோலி சிறப்பாக உள்ளதாகவும், பாகிஸ்தானின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு விராட் கோலிதான் கனவு நாயகன் என்றும் புகழ்ந்து பேசினார். அதுவும் உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா திக்குமுக்காடச் செய்த பிறகு கோலிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் வரும் 16-ஆம் தேதி இந்திய அணியை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் நிலையில், கோலியின் பாகிஸ்தான் ரசிகர்கள் யாருக்கு சப்போர்ட் செய்வது என்கிற குழப்பம் வரும் அளவுக்கு தீவிரமாக இருக்கின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் விராட் கோலியில் டை-ஹார்ட் விசிறியுமான உமர் ட்ராஸ் என்பவர், இந்திய அணியுடன் பாகிஸ்தான் மோதினால் தன் தாய்நாட்டை விடவும் இந்திய அணியின் வீரர் கோலியையும் இந்தியக் கொடியையுமே தூக்கிப் பிடித்து தன் ஆதரவை வெளிப்படுத்துபவர். தன் வீட்டில் கோலியின் படத்தையும் இந்திய தேசியக் கொடியையும் வைத்திருந்ததால் ஒரு முறை கைது தேசத்துரோக வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo of the day. A Virat Kohli fan with his jersey number 18 spotted on the roads of Lahore. Picture via @sohailimrangeo pic.twitter.com/JuoX3NHZMu
— Mazher Arshad (@MazherArshad) June 9, 2019