‘சச்சின், கங்குலிக்கு அடுத்து இவர் தான்..’ புதிய சாதனை படைத்த இந்திய வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 10, 2019 03:52 PM

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

shikar dhawan sets new record in world cup IND vs AUS match

இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சதம் அடித்துள்ளார். இந்த சதத்தின் மூலம் அவர் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் தவான் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த சதத்துடன் சேர்த்து ஐசிசி தொடரில் இதுவரை 6 சதங்களை அடித்துள்ளார் தவான். இதன்மூலம் இவர் ஐசிசி தொடர்களில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், சங்ககாராவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தலா 7 சதங்களுடன் இந்த வரிசையில் முதல் இடத்தில் உள்ளனர்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #DHAWAN