'வங்கி பரிவர்த்தனை செய்பவர்களின் கவனத்திற்கு'... 'டிசம்பரில் இந்தெந்த நாட்களில் விடுமுறை'... வெளியான முழு விவரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 30, 2020 05:05 PM

டிசம்பரில் வங்கிகளின் விடுமுறை குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. அதே போன்று  வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளின் பிராந்திய விடுமுறைகளைக் குறித்துத் தெரிந்து கொள்ள அந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Banks will remain closed for 11 days in December

வங்கி விடுமுறைகளின் படி நாட்டின் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதைத் தவிர்த்து பல்வேறு பொது மற்றும் மாநில பிராந்திய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றன. மத்திய அரசு விடுமுறை என்பது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

இதனிடையே பிராந்திய விடுமுறைகள் மாநில அரசங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த வகையில் டிசம்பர் 2020 நாடு முழுவதும் வங்கி விடுமுறைகள் குறித்த முழு பட்டியல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 1 - மாநிலமாக உருவான நாள் - நாகாலாந்து, சுதேச நம்பிக்கை நாள் - அருணாசலப்பிரதேசம்

டிசம்பர் 3- கனகதாச ஜெயந்தி- கர்நாடகா, உலக ஊனமுற்றோர் நாள்- திரிபுரா, புனித பிரான்சிஸ் சேவிரின் விருந்து- கோவா

டிசம்பர் 5- ஷேக் முஹம்மது அப்துல்லாவின் பிறந்த நாள்- ஜம்மு-காஷ்மீர் டிசம்பர் 12- இரண்டாவது சனிக்கிழமை

டிசம்பர் 18- யு சோசோ தாம்- மேகாலயா, குரு காசிதாஸ் ஜெயந்தி- சண்டிகர்

டிசம்பர் 19- கோவா விடுதலை நாள்- கோவா, ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் தியாக தினம்- பஞ்சாப்

டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் தினம்- தேசிய விடுமுறை

டிசம்பர் 26- நான்காம் சனி

டிசம்பர் 30- தமு லோசர்- சிக்கிம், யு கியாங் நங்பா- மேகாலயா

டிசம்பர் 31- புத்தாண்டு கொண்டாட்டம்- மணிப்பூர்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Banks will remain closed for 11 days in December | India News.