"சும்மா சும்மா எதுக்கு அவரையே 'குத்தம்' சொல்லிட்டு இருக்கீங்க.. அவரு ஒருத்தரால 'என்னங்க' பண்ண முடியும்??..." 'கோலி'க்காக களமிறங்கிய முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து ஒரு நாள் தொடரை இழந்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி மீது கடுமையான புகார்கள் எழுந்துள்ளது.
![harbhajan singh supports virat for his criticism in captaincy harbhajan singh supports virat for his criticism in captaincy](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/harbhajan-singh-supports-virat-for-his-criticism-in-captaincy.jpg)
சைனி, சாஹல் போன்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது, பந்து வீச்சின் போது பவுலிங் ஆப்ஷன்களை தவறாக தேர்வு செய்து அளித்தது என கோலியின் பல தவறுகளை ரசிகர்கள் மட்டுமின்றி சில முன்னாள் வீரர்களும் சுட்டிக் காட்டி வருகின்றனர். இதனால் கோலி கேப்டன்சி மீது நெருக்கடி எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
'கோலியின் தலைமைக்கு நெருக்கடி எதுவும் எழுந்ததாக நான் நினைக்கவில்லை. இது மாதிரியான ஒரு நெருக்கடி சூழ்நிலைகளை கோலி சிறப்பாக எதிர்கொண்டு ஆடுகிறார். அணியின் தலைவராக அவர் முன்னின்று அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்' என தெரிவித்தார்.
கோலி அணியின் கேப்டனாக இருப்பதால் தான் அவரால் சரிவர தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றொரு குற்றச்சாட்டும் இருந்தது. இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், 'அவரது கேப்டன் பதவி, அவரது பேட்டிங்கை நிச்சயம் பாதிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரே ஒருவரால் அணியின் வெற்றியை நிர்ணயிக்க முடியாது. கேஎல் ராகுல் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் இன்னும் இரண்டு வீரர்கள் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தைக் காட்டினால், கோலி தனது பேட்டிங்கை நெருக்கடி எதுவுமில்லாமல் சிறந்த முறையில் வெளிப்படுத்த முடியும்' என கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)