'இப்ப சந்தோசமா'?..'உங்க 'ஈகோ'வால வந்த சிக்கல் தான் இது'!.. கோலி செஞ்சது சரியா தப்பா?.. இந்திய அணி மீது செம்ம கடுப்பில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Nov 27, 2020 05:02 PM

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமாக ஆடி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

aus vs ind team india top order struggle without rohit sharma kohli

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று மிக திணறி வருகிறார்கள்.

சிட்னியில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 374 ரன்களை எடுத்தது. 375 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது.  

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமாக ஆடி அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இந்த போட்டியில் சிறப்பாகவே இருந்தது.

தவான், மயங்க், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல், பாண்டியா, ஜடேஜா என்று பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாகவே இருந்தது. ஆனால், ஏனோ இன்று இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடவில்லை.

பேட்டிங் இறங்கிய எல்லா வீரர்களும் அதிரடியாக ஆட வேண்டும் என்று ஆடி மோசமாக சொதப்பினார்கள். 375 ரன்கள் இலக்கு என்பதால் தொடக்கத்தில் இருந்து எல்லா பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டினார்கள். ஆனால், இதுவே இந்திய அணிக்கு எதிராக சென்றது. வரிசையாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனார்கள். அடுத்தடுத்து மயங்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் என்று முக்கிய வீரர்கள் எல்லோரும் அவுட் ஆனார்கள்.

அதிலும் மயங்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று பேருமே ஷாட் பந்தில் அவுட் ஆனார்கள்.

இந்த நிலையில்தான் இந்திய அணியில் ரோஹித் சர்மாவை எடுத்து இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

ரோஹித் சர்மா காயம் என்று கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் ஷாட் பந்துகளில் நன்றாக ஆட கூடியவர். ஆஸ்திரேலியாவிலும் இவர் சிறப்பாக ஆடி ரெக்கார்ட் வைத்துள்ளார். இவர் இல்லாமல் இந்தியா சிக்கலில் மாட்டி உள்ளது. அவரை காயம் என்று எடுக்கவில்லை.

ஆனால், இவர் ஐபிஎல் போட்டிகளில் கடைசியில் ஆடினார். இருந்தாலும் இவரை அணியில் எடுக்கவில்லை. கோலியின் ஈகோவால்தான் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

அணி தேர்வில் நிறைய அரசியல் உள்ளது என்று புகார் உள்ளது. கோலிக்கு எதிராக பலரும் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில், ரோஹித் சர்மா இல்லாமல் இந்திய அணியின் டாப் ஆர்டரும் மிக மோசமாக சொதப்பி உள்ளது. ரோஹித் இருந்திருந்தால் ஒருவேளை இந்திய பேட்டிங் சரிந்து இருக்காது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Aus vs ind team india top order struggle without rohit sharma kohli | Sports News.