"அந்த 'டீம்' சும்மா வேற மாதிரி 'ரெடி' ஆகிட்டு இருக்காங்க... மத்த டீம் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க..." எச்சரித்த 'ஹர்ஷா' போக்லே...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஐபிஎல் சீஸனின் ஆரம்பத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காத நிலையில், சில போட்டிகளில் மிக அருகில் வந்து வெற்றி வாய்ப்பைத் தவற விட்டது.
முதல் 7 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே பஞ்சாப் அணி வெற்றி கண்டிருந்த நிலையில், அடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதுவும் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகளான டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளை தோற்கடித்தது.
அந்த அணியின் கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால், கெயில், ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பஞ்சாப் அணி குறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணி தற்போது வலிமையாகி வருவதாக குறிப்பிட்ட ஹர்ஷா, நிக்கோலாஸ் பூரன் மற்றும் க்றிஸ் கெயில் ஆகியோரை எதிரணியினர் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
'பஞ்சாப் அணியின் பவுலரான ஷமியும் சர்வதேச அளவில் சிறந்த பந்து வீச்சை வீசி வருகிறார். அவரும் அணிக்கு அதிக வலிமை சேர்க்கிறார். மேக்ஸ்வெல் கூட டெல்லிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி பேட்டிங்கும் செய்தார். பஞ்சாப் அணி சிறப்பாக திட்டம் தீட்டி ஷமியுடன் இன்னொரு வேகப்பந்து வீச்சாளரையும் கொண்டு வந்தால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியும்' என ஹர்ஷா போக்லே கூறினார்.