"மேலே ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு.." எல்லா டீமையும் துவைச்சு காய போட்ட 'ராகுல்' அண்ட் 'கோ'... சூடு பிடிக்கும் 'ஐபிஎல்' களம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 26, 2020 11:05 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

KXIP five victories in a row moves to 4th position in table

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 28 ரன்களுடன் வெளியேறிய நிலையில், அதன்பிறகு கை கோர்த்த மந்தீப் சிங் மற்றும் கெயில் ஆகியோர் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்தனர். 'Universal Boss' க்றிஸ் கெயில் அதிரடியாக ஆடி 5 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மந்தீப் சிங் 66 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். முதல் 7 போட்டிகளில் வெற்றி கண்டிருந்த பஞ்சாப் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என நினைத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இனியும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதிலும் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்து விட முடியும் என்ற நிலையில் உள்ளது.

ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணி, இந்த முறை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிகம் பலம் வாய்ந்து விளங்குகிறது. இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி கோப்பையை பஞ்சாப் அணி கைப்பற்றுமா என பஞ்சாப் ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. KXIP five victories in a row moves to 4th position in table | Sports News.