"இனிமே நம்ம 'ஃபுல்' டார்கெட் அது மட்டும் தான்.." மிகத் தீவிரமாக 'ஸ்கெட்ச்' போடும் 'வில்லியம்சன்'?!.. வெளியான 'முக்கிய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், பலப்பரீட்சை.நடத்தவுள்ளனர்.

இந்த போட்டியானது, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் வரும் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது. மற்றொரு பக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி மோதி வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பமாகிறது. இதனிடையே, முதல் போட்டியில், காயம் காரணமாக அவதிப்பட்ட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson) நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து அணியின் சிறந்த கேப்டனாக மட்டுமில்லாமல், முன்னணி பேட்ஸ்மேனாகவும் வில்லியம்சன் வலம் வருகிறார்.
இதனால், அவர் இல்லாதது, நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது பற்றி பேசிய நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் (Gary Stead), 'கேன் வில்லியம்சன் ஒரு டெஸ்ட் போட்டியைத் தவற விடுவது என்பது, எளிதான முடிவல்ல. ஆனால், இது சரியானது என்று நாங்கள் கருதுகிறோம். அவர் பேட்டிங் செய்யும் போது, ஏற்படும் எரிச்சலைப் போக்க, அவரது முழங்காலில் ஊசி போடப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை மனதில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 18 நடக்கும் இந்த போட்டிக்கு முன்னர், அவர் தயாராவார் என நம்புகிறோம். வில்லியம்சன் இல்லாத காரணத்தால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், டாம் லதாம் கேப்டனாக செயல்படுவார்' என கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி ஆடி வெற்றி பெறுவதை ஒதுக்கி வைத்து விட்டு, மிக முக்கியமான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக, தற்போதே வில்லியம்சன் ஒய்வு எடுத்துள்ளதால், நிச்சயம் நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில், மிகத் தீவிரமாக அவர் உள்ளார் என்று தான் தோன்றுகிறது.

மற்ற செய்திகள்
