"இது மட்டும் 'ஃபைனல்ஸ்'ல நடந்துச்சு.. 'கோலி' அதோட 'காலி' தான்.." அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இந்திய அணி, கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து சென்றடைந்தது.

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் இந்திய அணியினர் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில், உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளனர்.
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணியை விராட் கோலி (Virat Kohli) சிறப்பாக வழி நடத்தி வரும் நிலையில், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேச போட்டிகளில் சதமடிக்கவேயில்லை. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலாவது, கோலி சதமடித்து அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா, ரஹானே போன்ற சிறந்த டெஸ்ட் வீரர்கள் இருந்தாலும், கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் நிலைத்து நின்று ரன்கள் குவித்தால், இந்திய அணிக்கு அது பேருதவியாக அமையலாம்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிளென் டர்னர் (Glenn Turner), கோலியின் பேட்டிங் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'கோலியின் பேட்டிங் மோசமாக உள்ளதா என்பதை பற்றி நான் ஊகிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்தின் பிட்ச் கண்டிஷன், ஸ்விங் மற்றும் சீம் பந்துகளுக்கு சாதகமாக இருந்தால், நிச்சயமாக கோலி திணறுவார். நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற போது, கோலி மற்றும் இந்திய வீரர்கள் திணறியிருப்பதை பார்த்திருக்கிறோம்.
இங்கிலாந்திலுள்ள மைதானங்களின் கண்டிஷன்கள், நியூசிலாந்திலுள்ள பிட்ச்களின் கண்டிஷனைப் போலவே இருக்கும். அது மட்டுமில்லாமல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், பிட்ச் கண்டிஷன் நிச்சயம் முக்கிய பங்காற்றும்' என டர்னர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
