"உங்களுக்கு 'வயசு' ஆகிடுச்சு,,.. கொஞ்சம் 'மூளை'ய USE பண்ணி ஆடுங்க..." 'தோனி'க்கு 'அட்வைஸ்' சொன்ன முன்னாள் 'வீரர்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிக மோசமான பார்மில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டும் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புண்டு என்ற நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை அணி ஆடி வருகிறது. முன்னதாக, இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சென்னை அணியின் கேப்டன் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஒரு போட்டியில் தோனி ரன் ஓட முடியாமல் மிகவும் சோர்வாகி நிற்பது போன்ற புகைப்படங்களும், அதிகம் வைரலானது. தோனிக்கு வயதாகி விட்டது என்றும், சென்னை அணியை அவரால் முந்தைய சீசன்களை போல வழி நடத்த முடியவில்லை என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஜாவித் மியாண்டட் தோனி குறித்து கூறுகையில், 'நான் எனது மூளையை பயன்படுத்தி தான் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடினேன். அதே போல, தோனியும் தனது மூளையை பயன்படுத்தி ஆடினால் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கிரிக்கெட் ஆடலாம். பழைய பார்மில் தோனி ஆட முடியாவிட்டாலும், அவரால் அணிக்கு நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
தோனி இன்னும் அதிக நேரம் உடற்பயிற்சி மற்றும் வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உதாரணமாக இதுவரை தோனி 1 மணி நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டால் இனிமேல் 2 மணி நேரம் பயுற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயம் தோனிக்கு நன்றாக தெரியும்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
