"தாஹிர பாத்து நீங்க கத்துக்கோங்க... இது எவ்ளோ மோசமான 'விஷயம்' தெரியுமா??... திடீரென ஹர்பஜன் சிங்கை சீண்டிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்... நடந்தது என்ன..??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 15, 2020 04:51 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து  இந்த ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னரே ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து முழுவதுமாக விலகினர். இனிமேல் இவர்கள் இருவரும் சென்னை அணியில் இடம்பெறப் போவதில்லை என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

csk and dhoni fans starts to criticize harbhajan after his tweet

அதே போல சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும், ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா ஆகியோருக்கு ஏதோ குழப்பம் ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், ஹர்பஜன் சிங் இந்த தொடரில் இருந்து வெளியேறியது முதல் சிஎஸ்கே அணி மற்றும் தோனிக்கு எதிராக மறைமுகமாக சில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். csk and dhoni fans starts to criticize harbhajan after his tweet

தற்போது மீண்டும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் தோனியை கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக மோதிய போது வைடு பால் ஒன்றிற்கு போட்டி நடுவர் வைடு கொடுக்காமல் விட்டது மிகப் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அப்போது தோனி, நடுவரிடம் கோபப்பட்டதும் பலர் தோனிக்கு எதிராக கருத்துக்களை பரப்ப காரணமாக அமைந்தது.

 

இதனையடுத்து, அந்த சம்பவத்தை வைத்து தோனியை ஹர்பஜன் சிங் மீண்டும் கிண்டல் செய்வது போன்று வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார். இந்த டீவீட்டால் கொந்தளித்த சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள், ஹர்பஜன் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

மறுபக்கம் சென்னை அணியிலுள்ள இம்ரான் தாஹிர் இதுவரை போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்காத போதும் தனது அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக உள்ளார். இதற்கு உதாரணமாக தாஹிரின் சமீபத்திய ட்வீட் ஒன்று விளங்கியது. csk and dhoni fans starts to criticize harbhajan after his tweet

 

இதனால் தாஹிரை பார்த்து ஹர்பஜன் சிங் கற்றுக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஹர்பஜன் சிங் செய்த ட்வீட் தற்போது அதிகம் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Csk and dhoni fans starts to criticize harbhajan after his tweet | Sports News.