"அப்படியே 'றெக்க' கட்டி பறக்குற மாதிரி இருக்குங்க...!" உணர்ச்சி வசப்பட்ட 'நடராஜன்'!!,.. போட்டிக்கு பின் காத்திருந்த மிகப்பெரிய 'சர்ப்ரைஸ்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன் பந்து வீச்சும் கவனம் பெற்றது. இந்த ஐபிஎல் சீசனில் யார்க்கர் மன்னன் என பல முன்னணி பந்து வீச்சாளர்கள் நடராஜனை பாராட்டி வரும் நிலையில், நேற்றைய போட்டியில் அவர் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அளித்த பேட்டியில், தோனியின் மிகப் பெரிய ரசிகனான தனக்கு தோனியின் விக்கெட்டை எடுப்பது தான் கனவு என நடராஜன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அவர் தோனியின் விக்கெட்டை எடுத்ததும் நடராஜனின் கனவு நிஜமானதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்ததற்கு பின்னர் நடராஜனை சந்தித்த தோனி, நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. இளம் கிரிக்கெட் வீரரிடம் வெகு நேரம் உரையாடி தனது அனுபவங்களை பகிர்ந்த தோனியையும் புகழ்ந்துத் தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்.

மற்ற செய்திகள்
