அப்படி என்னய்யா 'தப்பு' பண்ணிட்டாரு... சும்மா அவரையே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க..." 'தோனி'க்கு சப்போர்ட்டா வந்த முன்னாள் 'வீரர்'... 'நடந்தது' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில், ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 19 ஆவது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீச வந்தார். அவரது பந்தை ராஷித் கான் எதிர்கொண்ட போது, பந்து வைடு லைனுக்கு அருகே சென்றது. இதனை போட்டி நடுவர் வைடு பாலாக அறிவிக்கச் சென்ற நிலையில், கீப்பர் நின்ற தோனி மற்றும் தாக்கூர் ஆகியோர் இந்த பந்து வைடா என நடுவரிடம் கேட்பது போல கோபத்துடன் சைகை காட்டினர்.
உடனடியாக நடுவரும் வைடு பந்து என அறிவிக்காமல் தனது முடிவை மாற்றி விட்டார். ஆனால், பின்பு காணிக்கப்பட்ட ரீபிளேயில் அந்த பந்து வைடு என்பது போலத் தான் தெரிந்தது. இந்த சம்பவம் மிகப் பெரும் சர்ச்சையான நிலையில், பலர் தோனிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், தோனிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், தோனிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். தோனி செய்ததில் தவறு எதுவுமில்லை என தெரிவித்த கவாஸ்கர், அவர் ஒரு கேப்டனாக செயல்பட்டார். அவர் நடுவரை மிரட்டவில்லை. அவர் தனது அணிக்காக செயல்பட்டார். பேட்ஸ்மேன் கொஞ்சம் தள்ளி ஆடியதால் வைடு பந்தாக இருக்காதோ என அவர் அப்படி செயல்பட்டார். இதனைத் தவறு என்றெல்லாம் சொல்லி விட முடியாது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தோனிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கவாஸ்கரே தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
