'தோனி'யோட செம 'ஸ்கெட்ச்' ரெடி... இதுவரை போடாத ‘மாஸ்டர்’ PLAN-னோட... களமிறங்கும் 'CSK'!!! - இனிமே, அடிதான்... 'அதகளம்' தான்...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் பாதி லீக் போட்டிகளில் 7 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற நிலையில், இரண்டாவது பாதியின் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

இனியும் 6 லீக் போட்டிகளில் சிஎஸ்கே கிட்டத்தட்ட 5 போட்டிகளிலாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக, இந்த சீஸனின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியின் பேட்டிங் லைன் அப் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. குறிப்பாக, தோனி பார்மில் இல்லாத விஷயத்தையும் ரசிகர்கள் அதிகம் விமரசன்ம் செய்திருந்தார்கள்.
இதனையடுத்து, ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியில் தோனி சில புதிய மாற்றங்களை செய்திருந்தார். தொடக்க ஆட்டக்காரராக சாம் குரானை களமிறக்கியது, 7 பந்து வீச்சாளர்களை ஆட வைத்தது என பல புதுமையை தோனி செய்த்திருந்தார்.
நாளை டெல்லி அணியை சென்னை அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் டெல்லி அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி 2 விதமான அணியை மனதில் வைத்து செயல்படுவார் என தெரிகிறது.
அதாவது, சென்னை அணி முதலில் பேட்டிங் இறங்கினால் சாம் குர்ரானை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் நெருக்கடி இருக்காது. இதனால் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஷ் சாவ்லா மற்றும் கரண் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
அதே வேளையில், சென்னை அணி இரண்டாவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் பியூஷ் சாவ்லா அல்லது கரண் சர்மா ஆகியோரில் ஒருவரை உட்கார வைத்து விட்டு பேட்டிங் நெருக்கடியை சரி செய்ய ஜெகதீசன் களமிறக்கப்படலாம். இதனால், டாஸ் போட்ட பிறகே அதனை மனதில் வைத்து தோனி அணியை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களான வாட்சன், டு பிளெஸ்ஸி, பிராவோ, சாம் குர்ரான் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் நட்சத்திர வீரரான இம்ரான் தாஹிருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இனி வரும் லீக் போட்டிகளில் தாஹிருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
