'ஆளுநர் ஆனார் தமிழிசை சவுந்தர ராஜன்'... 'கடும் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்'...என பெருமிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 01, 2019 11:56 AM

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamilisai Soundararajan appointed as Telangana Governor

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை ''எதிர்பாராத நேரத்தில் கிடைத்துள்ள இந்த பதவி மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என பெருமித்ததுடன் கூறியுள்ளார்.

Tags : #TAMILISAISOUNDARARAJAN #BJP #TELANGANA GOVERNOR