வாவ்.. இது ஐபிஎல் சரவெடி! வந்தாச்சு 2 புது டீம்.. கேப்டன்கள் இவங்கதான்.. வீரர்கள் லிஸ்ட்.. முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக, இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எடுத்த வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றிருந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக, அதன் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரத்தில் வைத்து நடைபெற்றிருந்தது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பணிகள் தற்போதே ஆரம்பித்துள்ளது.
மெகா ஏலம்
கடந்த ஆண்டு, 8 ஐபிஎல் அணிகள் ஆடியிருந்த நிலையில், இந்த முறை இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் கலந்து கொள்ளவுள்ளதால், ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.
வீரர்கள் தக்க வைப்பு
புதிய அணிகள் இணைந்துள்ள காரணத்தினால், கடந்த முறை பங்குபெற்ற 8 அணிகளும், ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டு, 2- 4 வீரர்கள் வரை அணியில் தக்க வைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை வெளியேற்றினர். அணியிலுள்ள மற்ற வீரர்களை, நடைபெற இருக்கும் ஏலத்தில், அனைத்து அணிகளும் தேர்வு செய்யும்.
3 பேர் யார்?
அதே போல புதிதாக இணைந்துள்ள அணிகள், 3 வீரர்களை (2 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர்) மற்ற அணிகள் நீக்கிய வீரர்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த 3 வீரர்கள் யார் என்பது பற்றி, பல்வேறு தகவல்கள் கடந்த சில வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்தன.
அகமதாபாத் அணி
இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். மற்ற வீரர்களான ரஷீத் கான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தனர்.
ஹர்திக் பாண்டியா கேப்டன்
அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோரை தலா 15 கோடிக்கும், இளம் வீரர் சுப்மன் கில்லை 8 கோடிக்கும் அகமதாபாத் அணி வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லக்னோ அணி
மற்றொரு புதிய அணியான லக்னோ, கே எல் ராகுல், ரவி பிஷ்னோய் மற்றும் மார்கஸ் ஸ்டியோனிஸ் ஆகிய வீரர்களை வாங்கியுள்ளது. இதில் ராகுல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடியிருந்தனர். மற்றொரு வீரரான ஸ்டியோனிஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
ராகுல் கேப்டன்
லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளதையடுத்து, ராகுலை 17 கோடிக்கும், ஸ்டியோனிஸை 9.2 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோயை 4 கோடி ரூபாய்க்கும், லக்னோ அணி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 10 அணிகளும், வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில், போட்டிக்கு முன்பாக நடைபெறவுள்ள ஏலம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.