IPL 2022 : சர்ப்ரைஸ் கொடுத்த HARDIK PANDYA... இது வர கோபமா தான பார்த்தீங்க.. இனி குணமா தலைவனா பார்ப்பீங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், அகமதாபாத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்ட்யா உற்சாகமாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. முன்னர் அறிவித்தபடி ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் இன்று சமர்ப்பித்தன.
அகமதாபாத் அணியின் முதல் வீரராக ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அவர் 15 கோடி ரூபாய்க்கு அகமாத் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவரைத் தொடர்ந்து, 15 கோடி ரூபாய்க்கு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை வாங்கியுள்ள அகமதாபாத் அணி, இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை 8 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் விடுவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா, கீரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தேர்வு செய்தனர். கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக் மற்றும் அப்துல் சமத் ஆகியோரைத் தக்கவைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து பிரிந்து செல்ல ரஷித் முடிவு செய்தார். ஐபிஎல் 2021 சீசனுக்குப் பிறகு, ஷுப்மானை விட மற்ற வீரர்களைத் தேர்வு செய்ய கொல்கத்தா முடிவு செய்தது.
இந்நிலையில், ஐபிஎல் 2022 சீசனுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை அணியின் கேப்டனாக அஹமதாபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அகமதாபாத் அணியின் வழிகாட்டி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியதாவது, "இளம் வீரர், புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக்குடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அணிக்குள் சில மாற்றங்களை செய்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ஹலோ அகமதாபாத் புதிய அணியோடு இணைந்து பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் இறுதி வரை இந்த அணி போராடும் என உறுதியளிக்கிறேன். விரைவில் சந்திபபோம் என வீடியோவில் தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம். வரேவற்கிறோம் என்று கமான்ட் செய்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் 92 போட்டிகளில் 27.33 சராசரியில் 1476 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.