LUCKNOW SUPER GIANTS'.. இதுதான் எங்கள் அடையாளம்.. பெயரை வெளியிட்ட ஐபிஎல் அணி.. CSK கொடுத்த தரமான ரிப்ளை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி, தங்களது அணியின் பெயரை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு சிஎஸ்கே கொடுத்த ரியாக்ஷன் அதிகம் வைரலாகி வருகிறது.

14 ஆவது ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், புதிதாக இணைந்துள்ள அணிகள், தங்கள் வாங்கிய வீரர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது
முன்னதாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றிருந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்று அசத்தியிருந்தது.
புதிய அணிகள்
இதனைத் தொடர்ந்து, புதிதாக இரண்டு அணிகள் இந்தாண்டு சேர்க்கப்படவுள்ள காரணத்தினால், ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலமும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, 8 அணிகளும் ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டு, 2 - 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள், மற்ற அணிகள் நீக்கிய வீரர்கள் பட்டியலில் இருந்து, 3 பேரை (2 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர்) எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்து.
ஹர்திக் பாண்டியா கேப்டன்
தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள், தங்களின் அணிகள் வாங்கியுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில், அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை வாங்கியுள்ளது. அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படவுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
மற்றொரு அணியான லக்னோ, கே எல் ராகுல், ரவி பிஷ்னோய் மற்றும் மார்கஸ் ஸ்டியோனிஸ் ஆகியோரை வாங்கியுள்ளது. இந்த அணியை ராகுல் வழி நடத்தவுள்ளார். இந்நிலையில், தங்கள் அணியின் பெயர் என்ன என்பதையும், லக்னோ அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. 'லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்' என்ற பெயரில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், லக்னோ அணி காலடி எடுத்து வைக்கவுள்ளது.
விராட் கோலி விஷயத்தில் பிசிசிஐ எடுத்த முடிவு.. இப்டி எல்லாம் பண்ணா தோக்க தான் செய்வீங்க..
அதே பெயர்
லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில், புனே அணியின் உரிமையாளாராக இருந்துள்ளார். அப்போது, அந்த அணியின் பெயரிலும், சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. தற்போது மீண்டும், தன்னுடைய புதிய ஐபிஎல் அணிக்கும் அதே பெயரைத் தான் வைத்துள்ளார்.
And here it is,
Our identity,
Our name.... 🤩🙌#NaamBanaoNaamKamao #LucknowSuperGiants @BCCI @IPL @GautamGambhir @klrahul11 pic.twitter.com/OVQaw39l3A
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022
வாழ்த்தும் ரசிகர்கள்
லக்னோ அணியின் பெயர் குறித்த அறிவிப்பு, அவர்களின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், பிரபல ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணியின் பெயர் குறித்து கமெண்ட் ஒன்றைச் செய்துள்ளது.
'Super' Name Machi! 😉💛 https://t.co/RoWqWWrTRJ
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) January 25, 2022
சூப்பர் பேரு மச்சி
தங்கள் அணியின் பெயரில் சூப்பர் இருப்பது போல, லக்னோ அணியில் இருப்பதை குறிப்பிட்ட சிஎஸ்கே, 'சூப்பர் பேரு மச்சி' என ட்வீட் செய்துள்ளது. மேலும், பதிலுக்கு, தோனி விசில் போடும் பதில் கமெண்ட்டையும் லக்னோ அணி ட்வீட் செய்துள்ளது. இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
😇😉 https://t.co/NGssfZYwzU pic.twitter.com/ErIybXS7Qr
— Lucknow Super Giants (@LucknowIPL) January 25, 2022
தோனி ரசிகர்கள் அதிருப்தி
புனே அணி இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற போது, சிஎஸ்கே கேப்டன் தோனி, அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். முதல் தொடரில், தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால், அடுத்த ஆண்டில் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை புனே அணி நியமித்திருந்தது. இந்த முடிவால், தோனி ரசிகர்கள் அந்த சமயத்தில் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனிடையே, தற்போது சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
