‘1 நொடியில் காலியான 33 வருச ரெக்கார்டு’.. யாரு சாமி இவங்க.. தங்கம், வெள்ளி, வெண்கலம் 3-ம் ஒரே நாடு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 3 பதக்கங்களையும் ஒரே நாடு பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியாவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த முடிந்த போட்டிகளில் 22 தங்கப்பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் 19 தங்கப்பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 17 தங்கப்பதங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நடந்த 100 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா நாடு பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஓட்டத்தப்பந்தையத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். அதில் தாம்ப்சன் ஹெரா என்பவர் 10.61 நொடிகளில் 100 மீட்டரை கடந்து முதல் இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக, 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த புளோரன்ஸ் க்ரிப்த் என்பவர் 10.62 நொடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதனை 33 வருடங்கள் கழித்து ஜமைக்காவின் தாம்ப்சன் ஹெரா முறியடித்துள்ளார்.
அதேபோல் ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரஷர் 10.74 நொடிகளில் கடந்து இரண்டாவது இடத்தையும், ஷெரிகா ஜாக்சன் 10.76 நொடிகளில் கடந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் ஒரே நாட்டைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இதற்கு ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தைய ஜாம்பவான் உசேன் போல்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— Miranda🇾🇪🇾🇪🇾🇪 (@ThiagoSPFC1930) July 31, 2021